ஒரு பக்கம் ஷங்கர் மகன், மறுபக்கம் உதயநிதி மகன்.. சினிமாவில் களமிறங்கும் வாரிசுகள்
வாரிசுகள்
திரையுலகில் உள்ள நடிகர், நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோரின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகம் ஆவது என்பது வழக்கமாக நடைபெற்று வருவதுதான். பாலிவுட்டில் 90 சதவீதம் வாரிசுகள் மட்டுமே சினிமாவில் உள்ளனர்.
தென்னிந்திய சினிமாவிலும் திரையுலகினரின் வாரிசுகள் தொடர்ந்து சினிமாவில் களமிறங்கி வருகிறார்கள். அதில் சிலர் தங்களது கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறி உச்சத்தில் உள்ளனர்.
சமீபகாலமாக இந்த வாரிசுகளின் எண்ட்ரி அதிகமாகி வருவதை நம்மால் கவனிக்க முடிகிறது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம், விஜய்யின் மகன் சஞ்சய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஆகியோர் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
ஷங்கர் மகன் - உதயநிதி மகன்
இந்த நிலையில், ஷங்கர் வீட்டிலிருந்து மற்றொரு வாரிசும் சினிமாவில் களமிறங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக போகிறாராம். இப்படத்தை அட்லீயின் துணை இயக்குநரான இயக்கப்போவதாக கூறப்படுகிறது.
ஷங்கரின் மகன் ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியும் ஹீரோவாக விரைவில் அறிமுகமாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் போன்ற இயக்குநர்களில் ஒருவர் இயக்க திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான ஏறப்டுகள் அனைத்தும் நடந்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.