100 கோடியை நெருங்கும் தலைவன் தலைவி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
தலைவன் தலைவி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி.

கணவன் மனைவி உறவை மையமாக வைத்து உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நித்யா மேனன் நடித்திருந்தார். மேலும் செம்பன் வினோத், தீபா, சரவணன், யோகி பாபு, ஆர்.கே. சுரேஷ், மைனா நந்தினி, காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
வசூல்
படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில், வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் தலைவன் தலைவி திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளன.

அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபிசில் ரூ. 100 கோடியை நெருங்கி வரும் தலைவன் தலைவி படம், விரைவில் அந்த சாதனையை படைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan