மனைவியுடன் இணைந்து குட் நியூஸ் சொன்ன பிக் பாஸ் ஷாரிக்.. குவியும் வாழ்த்துக்கள்
ஷாரிக் ஹாசன்
வெள்ளித்திரையில் பிரபலமான நட்சத்திர ஜோடி ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுடைய மகன் நடிகர் ஷாரிக் ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார்.
கடந்த ஆண்டு மரியா ஜெரிப்ஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.
குட் நியூஸ்
இந்த நிலையில், தற்போது குட் நியூஸ் கூறியிருக்கிறார் ஷாரிக். ஆம், தனது மனைவி ஜெனிஃபர் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்துள்ளார்.
இதற்காக இருவரும் இணைந்து அழகாக போட்டோஷூட் நடத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை ஷாரிக் - ஜெனிஃபர் தம்பதிக்கு தெரிவித்து வருகிறார்கள்.