உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகர் ஷர்வானந்த்.. சிக்ஸ் பேக் லுக்.. புகைப்படத்தை பாருங்க
ஷர்வானந்த்
நடிகர்கள், நடிகைகள் படத்திற்காக கடினமான உழைப்பை மேற்கொள்வார்கள். உடல் எடையை குறைப்பது, உணவு கட்டுப்பாடு போன்ற விஷயங்களை செய்வதை நாம் பார்த்து இருக்கிறோம்.

அந்த வகையில் பிரபல நடிகர் ஷர்வானந்த் தனது புதிய திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். அதுமட்டுமின்றி சிக்ஸ் பேக் லுக்கில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பைக்கர்
ஷர்வானந்த் தற்போது தனது 36வது படமாக 'பைக்கர்' படத்தில் ரேஸராக நடித்து வருகிறார். இப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார். அதற்காக அவர் பல மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறையை பின்பற்றியுள்ளார். அவரது கடின உழைப்பிற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.

நடிகர் ஷர்வானந்த் தமிழில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் பிரபலமானார். இதன்பின், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, கணம் ஆகிய படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



