விஜய் சிறந்த நடிகரா?.. வம்பிழுத்த பிரபல மலையாள நடிகர்
ஷைன் டாம்
மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஷைன் டாம். விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து இருந்தார்.
இப்படம் வெளிவந்த சமயத்தில் ஷைன் டாம், தன்னை படத்தில் சரியாக காட்டவில்லை என்று இயக்குனர் நெல்சனை விமர்சனம் செய்தார். அதன் பின்னர் வருத்தமும் தெரிவித்து இருந்தார்.

சிறந்த நடிகரா?
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், "இங்கே நடிகருக்கான சம்பளம் நடிப்பு திறமையை பொறுத்து கொடுப்பதில்லை. யார் அதிக கூட்டத்தை திரையரங்கில் அழைத்து வருகிறாரோ, சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கிறாரோ அவர்களுக்கு மட்டும் தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது".
மேலும் அவர் கூறுகையில், "விஜய் அதிகமாக சம்பளம் வாங்குவதால் அவர் மம்மூட்டி, மோகன்லால் விட சிறந்த நடிகரா?.. எதற்காக மம்மூட்டி, மோகன்லால், கமல் ஹாசன் போன்ற நடிகர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த மாதிரியான நிலை மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
