ரஞ்சிதமே பாட்டுக்கு ஷிவானி நாராயணன் செம டான்ஸ்! ரசிகர்களை கவர்ந்த வீடியோ
ரஞ்சிதமே
விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடல் ரஞ்சிதமே சமீபத்தில் ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் வைரல் ஆனது. அதை விஜய் ரசிகர்கள் பெரிய ட்ரெண்ட் ஆகிவிட்டார்கள்.
அந்த பாடலை மொச்சகொட்ட பல்லழகி பாடலின் காபி என ஒரு தரப்பு விமர்சித்தாலும், படக்குழு அதை மறுத்தது. மொச்ச கொட்ட பல்லழகி பாடல் மெட்டில் பல பாடல்கள் வந்திருக்கிறது, வாரிசு படத்தில் அந்த பாடல் முதலில் வந்து அதன் பின் தான் ரஞ்சிதமே பாடல் துவங்கும் என பாடலாசிரியர் விவேக் கூறி இருக்கிறார்.
சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும் ரஞ்சிதமே பாடல் தான் தற்போது இணையத்தில் மிகப்பெரிய ட்ரெண்ட். அதிலும் குறிப்பாக ரஞ்சிதமே விஜய் ஸ்டெப்பை ஆடி ரீல்ஸ் வீடியோ பலரும் வெளியிட்டு வருகிறார்கள்.

ஷிவானி நாராயணன் டான்ஸ்
இந்நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் தற்போது ரஞ்சிதமே பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
ஹாட் உடையில் அவர் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
லவ் டுடே இவானாவா இது.. ஸ்கூல் போட்டோவில் எப்படி இருந்திருக்கிறார் பாருங்க