திடீரென அழகி போட்டியில் இருந்து வெளியேறிய நடிகர் ராஜசேகரின் மகள்!
பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ஆகியோரின் மகள் ஜீவிதா தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். அவர் நெஞ்சுக்கு நீதி படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்து இருந்தார். முன்பு அவர் ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு படத்திலும் நடித்து இருந்தார்.
ஷிவானி ராஜசேகர் நடிப்பது மட்டுமின்றி எம்பிபிஎஸ் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவர் தமிழ்நாடு சார்பில் மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டு வந்தார்.
ஆனால் தற்போது அதில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்கு திடீரென மலேரியா நோய் பாதிப்பு ஏற்பட்டதனால் தொடர்ந்து பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. மேலும் எம்பிபிஎஸ் செய்முறை தேர்வும் அதே தேதியில் வருவதால் நான் மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகிவிட்டேன் என தெரிவித்து இருக்கிறார்.
