சிவராஜ்குமாரின் 130வது திரைப்படத்தை இயக்கப்போவது தமிழ் இயக்குனரா! யார் தெரியுமா
சிவராஜ்குமார்
கன்னடத்தில் சூப்பர்ஸ்டார் நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் சிவராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் கூட நடித்திருந்தார்.

சில நிமிடங்கள் இவர் ஜெயிலர் படத்தில் வந்திருந்தாலும், மாபெரும் அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. எங்கு சென்றாலும் அனைவரும் ஜெயிலர் படத்தை குறிப்பிட்டு தான் சிவராஜிடம் பேசினார்கள்.
சிவராஜ்குமார் 130வது படம்
அந்த அளவிற்கு அந்த காட்சி பிரபலமானது. இந்த நிலையில், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகவுள்ள அவருடைய 130வது படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை பிரபல இயக்குனர் ரவிஅரசு தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சத்யஜோதி தியாகராஜன் தான் இப்படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இயக்குனர் ரவிஅரசு 2015ஆம் ஆண்டு வெளிவந்த ஈட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷை வைத்து ஐங்கரன் எனும் திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan