அந்த நடிகர் என்னை தொட முயன்றார், நான் அடித்துவிட்டேன்.. அதிர்ச்சி சம்பவத்தை கூறிய நடிகை பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே
தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், இப்படத்தின் தோல்விக்கு பின் தமிழ் சினிமா பக்கமே அவர் தலைகாட்டவில்லை.

இதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகையானார். முகமூடி படத்திற்கு பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பூஜா, விஜய்யுடன் பீஸ்ட், சூர்யாவுடன் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும் தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார்.
எல்லை மீறி நடந்த நடிகர்
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் பிரபல பான் இந்திய நடிகர் ஒருவர் தன்னிடம் எல்லை மீறி நடந்துகொண்டதை பற்றி கூறியுள்ளார்.

இதில், "சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான் இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ என்னுடைய கேரவனில் அனுமதியின்றி நுழைந்து எல்லை மீறி என்னை தொட முயன்றார். உடனடியாக அவரை நான் அறைந்தேன். அந்த சம்பவத்திற்கு பின் அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை" என கூறினார்.