பூஜா ஹெக்டேவிடம் ஒரு நடிகர் தவறாக நடந்துகொண்டது உண்மையா?... வெளிவந்த நிஜ தகவல்
பூஜா ஹெக்டே
தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், இப்படத்தின் தோல்விக்கு பின் தமிழ் சினிமா பக்கமே அவர் தலைகாட்டவில்லை.

இதன்பின் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகையானார். முகமூடி படத்திற்கு பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த பூஜா, விஜய்யுடன் பீஸ்ட், சூர்யாவுடன் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும் தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார்.
எல்லை மீறி நடந்த நடிகர்
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் கூறியதாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறது .

அது என்னவென்றால், "சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான் இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ என்னுடைய கேரவனில் அனுமதியின்றி நுழைந்து எல்லை மீறி என்னை தொட முயன்றார். உடனடியாக அவரை நான் அறைந்தேன். அந்த சம்பவத்திற்கு பின் அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை" என பூஜா கூறியதாக வைரலாகும் தகவல் உண்மை இல்லையாம்.
நடிகை அப்படி ஒரு பேட்டி கொடுக்கவே இல்லை என்று அவரது தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.