விஜய்யின் 68வது படத்தின் படப்பிடிப்பில் இருந்து வெளியான சூப்பர் போட்டோ- குவியும் லைக்ஸ்
விஜய் 68
நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்க வெளியாகி இருந்த இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூல் எந்த குறையும் இல்லாமல் நடந்தது.
இந்த படத்தை முடித்த கையோடு விஜய் தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார்.

படப்பிடிப்பு போட்டோ
வெங்கட் பிரபு இயக்க AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கணக்கில் வைக்க முடியாத அளவிற்கு பிரபலங்கள் நடிக்கிறார்கள். 90களில் நாம் பார்த்து ரசித்த பிரபலங்கள் பலர் இருக்க ரசிகர்கள் படத்தை காண ஆவலாக உள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா வேறு இசை, சொல்லவே வேண்டாம், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
இந்த நிலையில் விஜய்யின் 68வது படத்தில் நடிக்கும் நடிகை லைலா, நடிகர் பிரசாந்துடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு இவர் ஒன்றாக எடுத்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
Nice meet u #Prashant ? #Thalapathy68 Shooting Spot pic.twitter.com/Y6t5A8VVTN
— Laila (@Laila_laughs) December 7, 2023
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri
ஆப்பிரிக்காவில் மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பு - ஜனாதிபதி பதவி நீக்கபட்டதாக அறிவித்த இராணுவ வீரர்கள் News Lankasri