விடிய விடிய பார்ட்டி.. போதைபொருள் பயன்படுத்திய பிரபல நடிகையின் சகோதரர் கைது
பாலிவுட் பிரபலங்கள் போதை பொருள் சர்ச்சையில் சிக்குவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போதை பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக் கான் மகன் சமீபத்தில் தான் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பாலிவுட் ஹீரோயின் ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் போதை பொருள் பயன்படுத்தியதற்காக பெங்களூரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
முன்னணி நடிகையாக இருக்கும் ஷ்ரத்தா கபூர் பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சித்தாந்த் கைது
ஒரு தனியார் ஹோட்டலின் பப்பில் போதை பொருள் பயன்படுத்துகிறார்கள் என போலீசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ரெய்டு நடந்தது. விடிய விடிய நடந்த அந்த பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்திய ஆறு பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
மருத்துவ பரிசோதனையில் அது உறுதியாகி இருக்கிறது. அவர்கள் ஆறு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு பார்ட்டியில் போதை பொருள் எடுத்துக்கொண்டார்களா அல்லது வெளியில் போதை பொருள் பயன்படுத்திவிட்டு அதன் பின் இங்கு வந்தார்களா என விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
A cop shares information about raiding a drug party at a five star hotel in Bengaluru #SiddhanthKapoor #Bollywood pic.twitter.com/UMQ5Rgo66A
— Bangalore Times (@BangaloreTimes1) June 13, 2022

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
