ராஷ்மிகாவை அவமானப்படுத்தினாரா ஷ்ரத்தா கபூர்.. வைரலாகும் வீடியோ
தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் திரையுலகிற்கு செல்லும் பல நட்சத்திரங்கள் சில ஆண்டுகளிலேயே மீண்டும் தென்னிந்திய சினிமாவிற்கு திரும்பி விடுவார்கள். ஏ.ஆர். ரஹ்மான், மணி ரத்னம், இளையராஜா, கமல் ஹாசன் என பலரையும் இதற்கு உதாரணமாக கூறலாம்.
தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி பாலிவுட்டில் சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது Pan இந்தியா கலாச்சாரம் வந்தபின், அங்கிருந்து ஒரு நடிகர் தென்னிந்திய படங்களில் நடிப்பதும், தென்னிந்திய சினிமாவில் இருந்து ஒரு நடிகர் பாலிவுட் படங்களில் நடிப்பதும் சகஜம் ஆகிவிட்டது.
சமீபத்தில் கூட தமிழில் இருந்து பாலிவுட் பக்கம் போன இயக்குனர் அட்லீ ஜவான் எனும் மாபெரும் வெற்றி படத்தை பாலிவுட் திரையுலகிற்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானிவீட்டு விழா
நேற்று அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களான அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ராஸ்மிகா போன்றவர்களும் இதில் கலந்துகொண்டார்கள்.
அவமானப்படுத்தினாரா ஷ்ரத்தா கபூர்
இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா விழாவிற்கு வரும் போது அவர் எதிரே பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் வந்தார். உடனடியாக ராஷ்மிகா அவரை பார்த்து சிரித்தாலும், ஷ்ரத்தா கபூர் நடிகை ராஷ்மிகாவை கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்தும் படி கடுப்பான முகத்துடன் ராஷ்மிகாவை கடந்து சென்றுவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ராஷ்மிகாவின் வளர்ச்சியை பாலிவுட் நடிகைகளால் ஏற்றுக்கொள்ள முடியாவில்லை. அது தான் இதற்கு காரணம் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
Has Shraddha Kapoor intentionally ignored Rashmika Mandanna? ?? pic.twitter.com/LppYTRYNb3
— ????❤️? (@QHDposts) September 19, 2023

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
