ஒரு மாத வீட்டு வாடகை பல லட்சம்.. நெட்டிசன்களை அதிர வைத்த இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர்
ஷ்ரத்தா கபூர்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

என்னதான் பல கோடி சம்பளம் வாங்கி வந்தாலும் இவர் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா.

ஆம், நடிகை ஷ்ரத்தா கபூர் மும்பையில் ஜூஹுவில் உள்ள ஆடம்பர வீட்டில் வாடகைக்குத்தான் இருக்கிறார். அந்த வீட்டின் வாடகை எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா.

வாடகை ரூ. 6 லட்சம்
மும்பையில் ஜூஹுவில் உள்ள தனது ஆடம்பர வீட்டிற்கு மாதம் ரூ. 6 லட்சம் வாடகை செலுத்தி வருகிறாராம் நடிகை ஷ்ரத்தா கபூர். இந்த தகவல் வெளிவந்த நிலையில், என்னது ஒரு மாத வீட்டு வாடகை ரூ. 6 லட்சமா என நெட்டிசன்கள் அதிர்ந்துபோய்விட்டனர்.

நடிகர் ஷாருக்கான் கூட தனது குடும்பத்துடன் தற்போது வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார். அந்த வீட்டிற்கு மாதம் ரூ. 24 லட்சம் வாடகை செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.