ஷ்ரத்தா கபூர் திரைப்பயணத்தில் மாஸ் வசூல் செய்துள்ள Stree 2 படத்தின் முழு கலெக்ஷன்
ஷ்ரத்தா கபூர்
அமர் கௌஷிக் இயக்கத்தில் மடாக் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து ஆகஸ்ட் -15 வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் Stree 2.
இது ஒரு இந்தி மொழி நகைச்சுவை திகில் திரைப்படமாகும். இந்த படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அபர்சக்தி குரானா ஆகியோர் நடித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டில் வெளியான Stree படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியாகியுள்ளது. முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.
அந்த வகையில், ஒரே நேரத்தில் ஹாரர் மற்றும் காமெடி கலந்த ஒரு திகில் திரைப்படத்தை இயக்குனர் அமர் கொடுத்து அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் முன்னணி கதாபத்திரத்தில் நடித்த ஷ்ரத்தா கபூர் அவரின் சிறந்த நடிப்பு மூலம் இந்த படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றுள்ளார்.
பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
