நடிகை ஸ்ரேயாவின் மகளுக்கு நடந்த காதணி விழா, ரசிகர்களை கவர்ந்த கியூட் புகைப்படங்கள்...
மகளுக்கு நடந்த காதணி விழா
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரேயா.
இவர் விஜய், ரஜினி, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முக்கிய நடிகையாக திகழ்ந்து வந்தார்.
மேலும் Andrei Koscheev என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா அவருடன் ஸ்பேயினிலெ செட்டிலாகி வாழ்ந்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு ராதா என்ற மகளும் உள்ளார், அவ்வப்போது இவர்கள் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி தற்போது ஸ்ரேயா அவரின் மகள் ராதாவிற்கு காது குத்தியுள்ளதை புகைப்படமாக எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த கியூட் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள், அவரின் பதிவிற்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வரும் தளபதி 66 பட போட்டோஸ், செம கடுப்பில் ரசிகர்கள்..