இனி இப்படித்தான் நடிக்க போகிறேன்.. வெளிப்படையாக கூறிய நடிகை ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக என்றும் இருப்பவர் நடிகை ஸ்ரேயா. இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் தமிழில் வெளிவந்த அழகிய தமிழ் மகன், சிவாஜி, கந்தசாமி ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். மேலும் அண்மையில் வெளிவந்த மிராய் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வந்த இவர் கடந்த 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதே போல் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லிங்க்கை க்ளிக் செய்து நடிகர் ரோபோ ஷங்கரின் மறைவுக்கு உங்கள் இரங்கலை தெரிவியுங்கள்.
வெளிப்படையான பேச்சு
இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா சரண் அளித்துள்ள பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், "ரசிகர்களுக்கு விருப்பமானதை கொடுத்தால் அவர்கள் நம்மை விரும்புவதை விட மாட்டார்கள். அடுத்தடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய வகையில் நடிக்க போகிறேன்" என கூறியுள்ளார்.