அப்பா, அம்மா பிரிவுக்கு பின் இதுதான் நடந்தது.. ஸ்ருதிஹாசன் ஓபன்
ஸ்ருதிஹாசன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமா துறையில் அறிமுகம் ஆனவர்.
தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஸ்ருதி ரஜினியின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது தந்தை கமல் மற்றும் தாய் சரிகாவின் பிரிவிற்கு பின் அவர் வாழ்க்கையில் நடந்த சில விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.
ஓபன்
அதில், "என் அம்மா ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர். ஆனால் அப்பா நார்த்திகர். அதனால் வீட்ல யாரும் கோயிலுக்குப் போக அனுமதி இல்லை. எனக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கை உண்டு.
அதனால் என் அப்பாவுக்கு தெரியாமல் தாத்தாவுடன் சென்று வருவேன். இந்த விஷயம் அப்பாவுக்கு ரொம்ப நாட்களாக தெரியாமல் இருந்தது. நான் இன்று இந்த இடத்தில் தைரியமாக இருப்பதற்கு கடவுள் மேல் உள்ள நம்பிக்கை தான் காரணம்" என்று கூறியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
