அப்பா அம்மாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது.. திருமணம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியது
நடிகை ஸ்ருதி - சாந்தனு
நடிகை ஸ்ருதி ஹாசனும் மற்றும் சாந்தனு என்பவரும் காதலில் இருப்பதாக அவர்களே தெரிவித்தனர். அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ஸ்ருதி ஹாசன்.
[9Y5C8O ]
இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் காதலனை திருமணம் செய்யாதது ஏன் என்று கேள்வி கேட்டப்பட்டுள்ளது. இதற்கு அவரும் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
காதலனை திருமணம் செய்யாதது ஏன்
அதில் " எனக்கு திருமணத்தின் மீது பயமாக இருக்கிறது. எனது அப்பா அம்மாவின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. இதனால், தான் நான் திருமணம் யோசிக்கிறேன் என்று அர்த்தமில்லை. திருமணம் என்கிற வார்த்தையில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை.பயம் மட்டுமே இருக்கிறது.

அதனால் திருமணம் பந்தம் குறித்து நான் நிறையவே யோசித்து வருகிறேன். இருந்தாலும் கூட, சாந்தனு என் வாழ்க்கைக்கு வந்த பிறகு பல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் இரண்டு பேருக்கும் இடையே நிறைய விசயங்கள் ஒத்துப்போகிறது. " என்று கூறியுள்ளார்.