சினிமா வியாபாரத்துக்காக பயன்படுத்தப்படும் நடிகைகள்.. ஸ்ருதி ஹாசன் கூறிய ஷாக்கிங் தகவல்
நடிகை ஸ்ருதி ஹாசன்
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் கைவசம் தற்போது போலோ ஷங்கர், சலார், என்.பி.கே 107 ஆகிய படங்கள் உள்ளன.
அண்மையில் நடிகை ஸ்ருதி ஹாசன் அளித்துள்ள பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளதாகவும், சினிமா வியாபாரத்திற்காக நடிகைகள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
ஸ்ருதி ஹாசன் கருத்து
இதில் ' சமூகத்தில் இருப்பது போலவே சினிமாவிலும் ஆணாதிக்கம் இருக்கிறது. இந்திய சினிமாவை பொறுத்தவரை கதாநாயகர்களை மையப்படுத்தியே கதைகள் உருவாகிறது. அப்படிப்பட்ட படங்களில் சினிமா வியாபாரத்திற்காக மட்டுமே கதாநாயகிகளை பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் தற்போது தான் இந்த நிலை மாறி, கதாநாயகர்களுக்கு நிகரான படங்கள் கதாநாயகிகளுக்கும் வருகிறது ' என தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசனின் இந்த கருத்து திரையுலகில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வேறு யாரெல்லாம் பேசப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.