ஸ்ருதி ஹாசனுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டதா? அவரே விளக்கம்
நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வரும் சலார் படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். தமிழில் ஸ்ருதிஹாசன் கைவசம் எந்த படமும் இல்லை என்ற நிலையில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவர் உடன் காதலில் இருந்து வருகிறார். அவர்கள் ஜோடியாக தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருவதும் எல்லோருக்கும் தெரிந்தது தான்.
திருமணம் முடிந்துவிட்டதா?
இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சாந்தனு ஆகியோர் ரகசியமாக திருமணம் செய்துவிட்டனர் என ஒரு செய்தி இன்று பரவியது. பாலிவுட் பிரபலம் ஒருவர் பேட்டியில் 'ஸ்ருதி ஹாசனின் husband' என சாந்தனுவை குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் திருமணம் முடிந்துவிட்டது என ஒரு செய்தி பரவ தொடங்கிவிட்டது.
இந்நிலையில் ஸ்ருதி ஹசன் இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். "எனக்கு திருமணம் ஆகவில்லை. அனைத்தையும் ஓப்பனாக சொல்லும் நான் ஏன் அதை மறைக்க போகிறேன்" என அவர் கூறி இருக்கிறார்.
— shruti haasan (@shrutihaasan) December 26, 2023