போலியான பெயரில் சுற்றினேன், காரணம் இதுதான்.. நடிகை ஸ்ருதிஹாசன் உடைத்த ரகசியம்
ஸ்ருதிஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை ஸ்ருதிஹாசன். பாடகி, இசையமைப்பாளர், நாயகி என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாக கலவையான விமர்சனத்தையே பெற்றது. தற்போது ஸ்ருதிஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
உடைத்த ரகசியம்
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "நான் கமல்ஹாசனின் மகள் என்பதால் பொதுவெளியில் நான் சுதந்திரமாக சுற்றுவதற்கு சிரமமாக இருக்கும். அதனால், நான் கதாநாயகியாக நடிக்க துவங்குவதற்கு முன் எனக்கென ஒரு போலியான பெயரை உருவாக்கி அந்த பெயரிலேயே கொஞ்ச நாட்கள் வெளியே சுற்றினேன்.
இதனால் என்னை பற்றி தெரியாதவர்களுடன் எந்த தயக்கமும் இன்றி நான் விரும்பியபடி பேச முடிந்தது" என்று தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
