பல காதல் முறிவு.. திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய கமல் மகள் ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். கமல் ஹாஸ்னின் மகளான இவர் நடிகை மற்றும் பின்னணி பாடகியாக தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கூலி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகிறது.
காதல் முறிவு
நடிகை ஸ்ருதி ஹாசன் இதுவரை பல காதல் தோல்வியை சந்தித்து இருக்கிறார் என கூறப்படுகிறது. Michael Corsale, சாந்தனு ஹசாரிக்கா ஆகியோருடன் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. நடிகர் சித்தார்த் உடனும் காதல் முறிவு ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் தவிர்த்து வந்த நிலையில், தற்போது அதுகுறித்து தனது மனம் திறந்து பேசியுள்ளார்.
திருமணம்
காதலிப்பது பிடிக்கும். ஆனால், இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை. திருமணத்தை பற்றி யோசித்ததில்லை. ஆர்வமும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும்" என கூறியுள்ளார்.
திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.