அந்த படத்திற்கு பின் வாய்ப்பே கிடைக்கவில்லை.. ஸ்ருதிஹாசன் போட்டுடைத்த அதிர்ச்சி தகவல்
ஸ்ருதிஹாசன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு பிறந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வருகிறார்.
ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் பேட்டி ஒன்றில் 3 திரைப்படத்திற்கு பின் அவருடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், " 3 திரைப்படத்தில் நடித்து முடித்த பின் 2 ஆண்டுகள் எந்தவித பட வாய்ப்புகளும் இன்றி நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அதன் பின், அந்த படம் ரீ ரிலீஸ் ஆன பிறகு தான் மக்களுக்கு அந்த ஜனனி கேரக்டர் எந்த அளவிற்கு பிடித்தது என்பதை அறிந்து கொண்டேன்.
இருப்பினும் நான் தமிழ் படங்களில் நடிப்பதை விட்டு கொடுக்கமாட்டேன். தற்போது கூட ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார். இப்போது ஸ்ருதிஹாசன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் கூலி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
