பல ஆயிரம் கோடி சொத்து வைத்திருக்கும் அமிதாப் பச்சன்! ஆனால் 3000 ரூ. டீச்சர் வேலைக்கு சென்ற அவர் சொந்த மகள்
அமிதாப் பச்சன்
ஹிந்தி சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அமிதாப் பச்சனுக்கு சுமார் 3396 கோடி ருபாய் மதிப்புக்கு சொத்து இருக்கிறது. அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் என எல்லோரும் சினிமாவில் கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்.
அமிதாப்பின் சொந்த மகள் ஸ்வேதா பச்சன் நிகில் நந்தா என்ற டெல்லி தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவரது மகள் நவ்யா நவேலி விரைவில் சினிமாவில் ஹீரோயினாக நுழைய இருக்கிறார்.
டீச்சர் வேலை செய்த ஸ்வேதா பச்சன்
அமிதாப் மகள் ஸ்வேதா பச்சன் திருமணத்திற்கு பிறகு ஒரு கிண்டர்கார்டன் பள்ளியில் டீச்சராக வேலை செய்தாராம். அதற்கு 3000 ருபாய் மாத சம்பளம் கிடைத்தது என சமீபத்தில் கூறி இருக்கிறார் அவர். மேலும் தற்போது அவர் சொந்தமாக ஒரு பேஷன் லேபிள் நடத்தி வருகிறார் அவர்.
தனக்கு சின்ன வயதில் இருந்தே பணம் பற்றிய விஷயங்கள் அதிகம் தெரியாது, அதனால் தற்போது நடத்திவரும் நிறுவனத்தின் பைனான்ஸ் விஷயங்கள் கூட நான் கவனிப்பதில்லை. இந்த நிலை என் மகள் நவ்யா நவேலிக்கு வர கூடாது என அனைத்தையும் தற்போது அவளையே பார்க்க வைக்கிறேன்.
வீட்டின் தினசரி செலவுகளை கூட நவ்யா தான் நிர்வகிக்கிறார் என ஸ்வேதா பச்சன் தெரிவித்து இருக்கிறார்.