எனக்கு கிடைத்த மகாலட்சுமி.. நடிகர் சித்தார்த் யாரை கூறுகிறார் பாருங்க
நடிகர் சித்தார்த்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சாக்லெட் பாயாக வலம் வந்தவர் சித்தார்த். அப்படத்திற்கு பிறகு மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் நடித்தார்.
பின், பிரவுதேவா இயக்கிய Nuvvostanante Nenoddantana படத்தின் மூலம் தெலுங்கிலும் நுழைந்தார். தொடர்ந்து இரண்டு மொழிகளிலும் படங்கள் நடித்தவர் பாலிவுட்டிலும் படங்கள் நடிக்க தொடங்கினார்.
பல வெற்றிப்படங்கள் கொடுத்து வந்த சித்தார்த் இப்போது தனித்துவமான கதைகள் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார், இவரது நடிப்பில் வெளியான சித்தா படம் நல்ல வரவேற்பு பெற்றது.
அதை தொடர்ந்து, கடைசியாக இந்தியன் 2 படத்திலும் நடித்திருந்தார். தற்போது, இவர் நடிப்பில் வரும் 29 - ம் தேதி 'மிஸ் யூ' திரைப்படம் வெளியாக உள்ளது.
சித்தார்த் பேட்டி
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சித்தார்த் அவரது காதல் மனைவி அதிதி ராவ் குறித்து பேசியுள்ளார். அதில், " அதிதி போன்ற ஒரு பெண் மனைவியாக அமைந்தது எனக்கு கிடைத்த வரம்.
எனக்கு எல்லாமே என் அப்பா அம்மா தான் அவர்களை மகிழ்விக்கும் விதமாக எங்கள் வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி கிடைத்துள்ளார். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் திரைப்பயணமும் நன்றாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
