அவர் கூட எல்லாம் நடிக்க முடியாது என சொன்ன சித்தார்த்.. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்ட நடிகர்
நடிகர் சித்தார்த் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் டெஸ்ட் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் நயன்தாரா, மாதவன் உள்ளிட்டோரும் மெயின் ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகர் இந்த படத்தில் தான் நடிக்க கமிட் செய்யப்பட்ட பிறகு திடீரென அதில் இருந்து நீக்கப்பட்டதாக கூறி இருந்தார்.
"என்னை ஒரு படத்தில் புக் செய்த பிறகு, நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது. வந்தாலும் ஓடாது. இது வரலாறு. வரலாறு தொடர்கிரது" என அவர் பதிவிட்டு இருந்தார்.
சித்தார்த்
இந்த படத்தில் எஸ்வி சேகர் உடன் நடிக்க முடியாது என நடிகர் சித்தார்த் தான் கூறினாராம். அதை படக்குழு எஸ்வி சேகரிடம் கூறி இருக்கிறார்கள்.
'நீங்க மோடி ஆதரவாளர், அவர் எதிர்ப்பாளர், அதனால் அப்படி சொல்கிறார்' என காரணம் கூறினார்களாம்.
இதனால் கோபமான எஸ்வி சேகர் சித்தார்த் 50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறாராம்.