மூன்று நடிகைகளை நெருக்கமாக காதலித்து வந்த சித்தார்த்.. அதிதி ராவ்வுடன் இரண்டாம் திருமணம்
சித்தார்த் - அதிதி
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரி என்பவரை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த புகைப்படத்தை கூட வெளியிட்டு இருந்தனர்.
நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பதை அறிவோம். அதே போல் அவர் சில நடிகைகளுடன் டேட்டிங் செய்துள்ளாராம். மேக்னா என்பவரை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார். 2007ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார்.
மூன்று நடிகைகளுடன் காதல்
இதன்பின் பாலிவுட் நடிகை சோஹா அலி கான் என்பவருடன் டேட்டிங் செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இந்த உறவு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லையாம்.
பின் நடிகை ஸ்ருதி ஹாசனை காதலித்து வந்துள்ளாராம் சித்தார்த். இரண்டு ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரேக் அப் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து நடிகை சமந்தாவை காதலித்து வந்துள்ளாராம். இதில் நடிகை சமந்தா, சித்தார்த்தை திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன காரணம் என தெரியவில்லை திடீரென இருவரும் பிரிந்துவிட்டனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
