சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 'மிஸ் யூ' படத்தின் மூன்று நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
சித்தார்த்
இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நடிகை அதிதி ராவ்வை காதலித்து இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
சித்தா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த இந்தியன் 2, எதிர்பார்த்த வரவேற்பை பெற்று தரவில்லை. கடுமையான விமர்சனங்களை நடிகர் சித்தார்த் எதிர்கொண்டார்.
மிஸ் யூ வசூல்
கடந்த வாரம் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மிஸ் யூ. என். ராஜசேகர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சித்தார்த் உடன் இணைந்து அஷிகா ரங்கநாத், பாலசரவணன், மாறன், கருணாகரன் ஆகியோர் நடித்திருந்தனர்.
மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மூன்று நாட்களில் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.