ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 படத்தில் சித்தார்த் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சித்தார்த் பாடியது நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
படத்தின் ரிலீசுக்கு பிறகு 'சித்ரா அரவிந்தன், சோசியல் மீடியா' என சித்தார்த் பேசிய வசனமும் ட்ரோல்களை சந்தித்தது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் சித்தார்த் அந்த ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
பதிலடி
"இந்த 2கே கிட்ஸ் எல்லாம் இந்த உலகமே 2000 வருடத்திற்கு பிறகு தான் தொடங்கியது என நினைகிறார்கள். வேலை இல்லாதவன் எதாவது நெகடிவ் ஆக சொல்லிட்டு தான் இருப்பான்."
"சித்தா படம் பலருக்கும் பிடித்தது. ஆனால் சித்தா படத்தையே திட்டுபவர்கள் இருக்காங்க. திட்ட தான் செய்வாங்க. 10 பேர் இருந்தால் அதில் கொஞ்சம் பேர் திட்ட தான் செய்வாங்க. அதை ஏன் காது கொடுத்து கேட்டுட்டு இருக்கனும்."
இவ்வாறு சித்தார்த் கூறி இருக்கிறார்.

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்; எப்போது முதல்? எங்கே இருந்து இயங்கும்? - அமைச்சர் அறிவிப்பு IBC Tamilnadu

சிங்கிள் பசங்க: தமிழின் பெருமை பற்றி அதிரும் தொணியில் பேசிய ராவணன்! வியப்பில் ஆழ்ந்த அரங்கம் Manithan

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
