இது மட்டும் நடந்தால் நடிப்பதை நிறுத்திவிடுவேன்: சித்தார்த் அதிரடி
நடிகர் சித்தார்த் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபலம் ஆனவர். தற்போது அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் என்றாலும் சமூக வலைத்தளங்களில் அவர் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சித்தார்த்தின் ட்விட்கள் அவ்வப்போது சர்ச்சைகளையும் ஏற்படுத்துவதுண்டு. அந்த அளவுக்கு அவர் ட்விட்டரில் ஆக்டிவ். தற்போது Escaype Live என்ற வெப் சீரிஸில் அவர் நடித்து இருக்கிறார். அது ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்து இருக்கும் பேட்டியில் அவர் கூறி இருபதாவது. "நான் டெல்லி பையன் என்பதையே பலரும் மறந்து விடுகிறார்கள். நான் ஹிந்தி நன்றாகவே பேசுவேன். அதனால் இந்த மொழியில் சுவாரஸ்யமாக இருக்கும் ஸ்கிரிப்ட் வந்தால் நடிக்கிறேன்."
"வித்யாசமாக ரோல்கள் கிடைக்கும் வரை நடிப்பேன். கிடைக்கவில்லை இல்லை என்றால் வேறு வேலை எதாவது பார்ப்பேன்" எனவும் கூறி இருக்கிறார் அவர்.

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
