விஜய்யின் கோட் படத்திலிருந்து வெளியேறிய முக்கிய நபர்!! லேட்டஸ்ட் தகவல்..
கோட்
Science fiction டெம்ப்ளட்டில் நிறைய தமிழ் படங்களை பார்த்து வருகிறோம். இப்போது விஜய்யின் கோட் படமும் அந்த கதை அம்சத்தில் தான் உருவாகி வருகிறது.
வெங்கட் பிரபு, அஜித்துக்கு எப்படி மங்காத்தா திரைப்படத்தை கொடுத்தாரோ அதை போல, விஜய்க்கு கோட் திரைப்படம் சூப்பர் ஹிட்டாக அமையும் என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மேலும் படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, மேக் மோகன் என பல பிரபல நடிகர்கள் இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது.
லேட்டஸ்ட் தகவல்
இந்நிலையில் GOAT படம் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் கேப்டன் மில்லர், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த சித்தார்த் நுனி கோட் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவருகிறார்.
தற்போது சில காரணங்களால் அவர் கோட் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக சக்தி சரவணன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
