பிரபல நடிகரை கரம்பிடிக்கும் கியாரா அத்வானி! திருமணம் எப்போ தெரியுமா?
தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை கியாரா அத்வானி. இவர் எம்எஸ் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்க பட்ட படத்தில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கியாரா அத்வானி தற்போது இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் RC -15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார்.
திருமணம்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவை கியாரா அத்வானி காதலிக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், இவர்களின் திருமணம் வருகின்ற பிப்ரவரி 6 -ம் தேதி ஜெய்சல்மர் நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைப்பெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த வருடம் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் - ஆலியா பட், கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் போன்ற பிரபலங்கள் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த லிஸ்ட்டில் விரைவில் கியாரா அத்வானி பெயரும் வர இருக்கிறது.
மகள் போட்டோவை மோசமாக வெளியிடுகிறார்கள்.. ராஜா ராணி சீரியல் நடிகை அதிர்ச்சி புகார்

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan

கல்லூரியில் மோசமான ஆங்கில பேச்சால் கேலி செய்யப்பட்டவர்.., UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை News Lankasri
