மகள் போட்டோவை மோசமாக வெளியிடுகிறார்கள்.. ராஜா ராணி சீரியல் நடிகை அதிர்ச்சி புகார்
விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் மாமியார் ரோலில் நடித்து வருகிறார் ப்ரவீனா. அவர் சன் டிவியின் இனியா சீரியலில் தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறார்.
சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் ப்ரவீனா தற்போது ஒரு நபர் தனது போட்டோவையும் மகள் போட்டோவையும் ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டு வருவாதாக புகார் கூறி இருக்கிறார்.
மகள் போட்டோவை இப்படி பண்றாங்க!
கடந்த வருடம் தனது போட்டோவை ஆபாசமாக எடிட் செய்து வெளியிட்ட நபர் மீது ப்ரவீனா புகார் அளித்த நிலையில் அந்த நபர் கைதானார். அதன் பின் தற்போது ஜாமினில் வெளிவந்திருக்கிறார் அவர்.
"தற்போது தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் அந்த நபர் செயல்பட்டு வருகிறார். எனது போட்டோ, மகள் போட்டோவை ஆபாசமாக எடிட் செய்து வெளியிட்டு வருகிறார். அவரை பற்றி தற்போது எனது மகள் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்" என ப்ரவீனா கூறி இருக்கிறார்.
விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?