பிச்சைக்காரன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. விஜய் ஆண்டனி இல்லை..
பிச்சைக்காரன்
இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து Satna Titus, தீபா ராமானுஜம், பகவதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.
மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இப்படத்திலிருந்து இடம்பெற்ற அம்மா பாடல் படத்திற்கு வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளிவந்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
முதலில் நடிக்கவிருந்தது இவரா
இந்நிலையில், ப்ளாக் பஸ்டர் ஹிட்டான பிச்சைக்காரன் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சித்தார்த் தானாம். முதலில் பிச்சைக்காரன் கதையை சித்தார்த்திடம் கூறியபோது அவர் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம்.
ஏனென்றால் இயக்குனர் சரி அப்போது கூறிய கதை வேறு. அதன்பின் அந்த கதையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்து விஜய் ஆண்டனியிடம் கதையை கூறியுள்ளார். அவரும் ஓகே சொல்லி படத்தில் நடித்துள்ளார். படத்தை பார்த்த சித்தார்த் இந்த படத்தை நான் பிஸ் பண்ணிவிட்டேனே என வருத்தப்பட்டாராம்.

அதற்கு பதிலாக சசி இயக்கியத்தில் அடுத்ததாக வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் சித்தார்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்களை ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்க்கும் தவெக அரசு - எடப்பாடி பழனிசாமி விமர்சனம் IBC Tamilnadu
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan