ஜான் சீனா போல மனைவியை அடித்த சீரியல் நடிகர் சித்து! வைரல் வீடியோ
சித்து மற்றும் ஷ்ரேயா ஜோடி வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
சித்து - ஷ்ரேயா
திருமணம் சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் சித்து. அவர் அதே தொடரின் ஹீரோயின் ஷ்ரேயா அஞ்சனை நிஜத்திலேயே காதல் திருமணம் செய்து கொண்டார். திரையில் ஜோடியாக நடித்து நிஜத்திலும் ஜோடியான சின்னத்திரை நட்சத்திரங்கள் லிஸ்ட் மிக பெரியது. அதில் இவர்களது பெயரும் முக்கியமாக இருக்கும்.
தற்போது சித்து விஜய் டிவியில் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வருகிறார். அந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.

மனைவி உடன் வீடியோ
தற்போது சித்து மற்றும் ஷ்ரேயா இருவரும் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர். அப்போது அங்கே எடுத்த வீடியோ ஒன்றை சித்து வெளியிட்டு இருக்கிறார்.
WWE ஜான் சீனா போல அவர் மனைவியை தூக்கி தண்ணீரில் போட்டிருக்கிறார். வீடியோவை நீங்களே பாருங்க.