SIIMA Awards 2025: விருதுகளை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, த்ரிஷா.. லிஸ்ட் ஈதோ
SIIMA Awards 2025
SIIMA Awards 2025 தென்னிந்திய அளவில் பிரம்மாண்டமாக நடக்கும் விருது விழாக்களில் ஒன்று தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA).
கடந்த ஆண்டு வெளிவந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கு 2025ல் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் இருந்து சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, கார்த்தி, ஹரிஷ் கல்யாண், கமல் ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் கிடைத்துள்ளது.
த்ரிஷா 25 ஆண்டுகள் சினிமாவில் பயணித்துள்ளார் என்பதால், அவருக்கு சிறப்பு விருது கொடுத்துள்ளனர். மேலும் பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களை கௌரவிக்கும் வகையில் சாதனையாளர் என்கிற விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது வென்றவர்கள் பட்டியல் :
- The Exemplary Achievement Award - நடிகர் சிவகுமார்
- ஸ்பெஷல் ரைசிங் ஸ்டார் - ஹரிஷ் கல்யாண்
- சிறந்த நடிகர் (Critics’ Choice) - கார்த்தி (மெய்யழகன்)
- சிறந்த நடிகை - நடிகை சாய் பல்லவி (அமரன்)
- யூத் ஐகான் ஆஃப் தென்னிந்திய சினிமா - நடிகர் சிவகார்த்திகேயன்
- Fresh face - நடிகை சஞ்சனா (லப்பர் பந்து)
- சிறந்த திரைப்படம் - அமரன்
- சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்)
- Honouring 25 Years excellence in cinema - நடிகை த்ரிஷா
- சிறந்த வில்லன் - நடிகர் அனுராக் காஷ்யப் (மகாராஜா)
- சிறந்த நடிகை (Critics' Choice) - நடிகை துஷாரா விஜயன் (ராயன்)
- சிறந்த இயக்குனர் - ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
- சிறந்த துணை நடிகை - நடிகை அபிராமி (மகாராஜா)
- சிறந்த இயக்குநர் (Critics' Choice) - நித்திலன் சுவாமிநாதன் (மகாராஜா)
- சிறந்த துணை நடிகர் - கலையரசன் (வாழை)
- சிறந்த நகைச்சுவை நடிகர் - பாலசரவணன் (லப்பர் பந்து)
- சிறந்த அறிமுக இயக்குநர் - தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து)
- சிறந்த அறிமுக நடிகர் - விஜய் கனிஷ்கா (ஹிட் லிஸ்ட்)
- சிறந்த அறிமுக நடிகை - ஸ்ரீ கௌரி ப்ரியா (லவ்வர்)
- சிறந்த பின்னணி பாடகர் - ஹரிசரண் (மின்னலே பாடல் ‘அமரன் படம்’)
- சிறந்த பின்னணி பாடகி - சிந்தூரி (மினிக்கி மினிக்கி ‘தங்கலான் படம்’)
- சிறந்த பாடலாசிரியர் - உமாதேவி குப்பன் (போறேன் நா போறேன் பாடல், ‘மெய்யழகன் படம்’)
- சிறந்த ஒளிப்பதிவு - Ch சாய் (அமரன்)
இதில் 2024ல் வெளிவந்த படங்களில் அமரன் திரைப்படத்திற்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.