கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சிம்பு.. விஜய்க்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் செய்த விஷயம்
வாரிசு தீ தளபதி
விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் 'ரஞ்சிதமே' சில வாரங்களுக்கு முன் வெளிவந்து சூப்பர்ஹிட்டாகியுள்ளது.
இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' இரு நாட்களுக்கு முன் வெளிவந்தது.
சிலம்பரசன் குரலில் ஒலித்த இப்படம் தான் தற்போது படுவைரலாக பேசப்பட்டு வருகிறது. பாடியது மட்டுமல்லாமல் இந்த லிரிகள் வீடியோ பாடலில் நடனமும் ஆடி விஜய்க்கு ட்ரிபூட் செய்துள்ளார் சிம்பு.
சிம்பு செய்த விஷயம்
இந்நிலையில், தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, விஜய்யின் வாரிசு படத்தின் பாடலுக்காக சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்துள்ளாராம்.
அதுமட்டுமின்றி வாரிசு படத்தில் கேமியோ ரோலிலும் சிம்பு நடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.