நடிகர் சிம்புவின் சிறந்த திரைப்படங்கள்
தமிழ் திரையுலகில் தனது சிறு வயதில் இருந்து தற்போது வரை பன்முக திறமையால் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் நடிகர் சிம்பு. அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினாலும், தொடர்ந்து படங்களில் நடித்து தனது ரசிகர்களை மகிழ வைத்து வருகிறார். அப்படி, சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்களில் சிறந்தவை பற்றிய பார்வையே இந்த கட்டுரை..
கோவில்
கடந்த 2004ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த கோவில் திரைப்படம் தான், நடிகர் சிம்புவின் முதல் ஹிட் படம் ஆகும். இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து சோனியா அகர்வால், ராஜ்கிரண், வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். காதல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
மன்மதன்
ஏ.ஜே. முருகன் இயக்கத்தில் சிம்பு எழுதி நடித்த திரைப்படம் மன்மதன். பெண்களை காதலித்து ஏமாற்றி, கொலை செய்யும் கொலைகாரனாக நடித்திருந்தார் சிம்பு. இதற்காக திரையுலக நட்சத்திரங்களிடம் நல்ல நடிகர் என்ற பெயரையும் சிம்பு பெற்றார். அண்ணன், தம்பி என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் சிம்பு. மேலும் இப்படத்தில் இவருடன் இணைந்து ஜோதிகா, கௌண்டமணி, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கோவில் படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் சிம்புவிற்கு சூப்பர்ஹிட்டான திரைப்படமும் இதுவே ஆகும்.
வல்லவன்
சிம்பு, நயன்தாரா, ரீமா சென் இணைந்து நடித்து வெளிவந்த காதல் திரைப்படம் வல்லவன். சிம்பு மற்றும் நயன்தாராவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சிம்பு நடித்து இயக்கியிருந்த இப்படம் சிப்பியின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இன்றும் ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பட்டையை கிளப்பியது என்று தான் சொல்லவேண்டும். குறிப்பாக 'லூசு பெண்ணே' பாடல் இன்றும் பலருடைய ரிங் டோனாக ஒளிந்துகொண்டு இருக்கிறது.
விண்ணைத்தாண்டி வருவாயா
தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்து வந்த சிம்புவிற்கு முதல் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது, விண்ணைத்தாண்டி வருவாயா. கவுதம் மேனன் இயக்கத்தில் முதல் முறையாக சிம்பு மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த இப்படம் இன்று கல்ட் படமாக கொண்டாடப்படுகிறது. படத்தின் வெற்றிக்கு இவர்கள் ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம், இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். அவரின் ஒவ்வொரு பாடல்களும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அனைவரின் மனதிலும் பதிய வைத்தது. குறிப்பாக மன்னிப்பாயா பாடல், இன்றும் பல காதல் ஜோடிகளின் Favorite-டான ஒன்று.
அச்சம் என்பது மடமையடா
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின் மீண்டும் 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் கைகோர்த்தார்கள் கவுதம் மேனன் - சிம்பு. ரொமான்டிக், ஆக்ஷன் கதைக்களத்தில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்தது. விமர்சனம் மற்றும் வசூல் இரண்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து மஞ்சிமா மோகன் முதல் முறையாக ஜோடி போட்டு நடித்திருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா போலவே, இப்படத்திலும் தனது இசையால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார் ஏ.ஆர். ரஹ்மான்.
மாநாடு
சர்ச்சைகள், விமர்சனங்கள், அவமானங்கள் என அனைத்தும் சந்தித்துவிட்டு, தனது ரசிகனுக்காக உடல் எடையை குறைத்து சிம்பு நடித்த படம் மாநாடு. வித்தியாசமான கதைக்களத்தில் எடுத்து இயக்கியிருந்த வெங்கட் பிரபுவிற்கு பாராட்டுக்கள் குவிந்தது. சிம்புவுக்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்களை தன்வசப்படுத்தினார் எஸ்.ஜே. சூர்யா. விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், வசூல் ரீதியாக ரூ. 85 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் கலெக்ட் செய்து சாதனை படைத்தது. மேலும், இப்படம் தான் நடிகர் சிம்புவிற்கு முதல் ரூ. 50 கோடி வசூல் செய்த படமாக அமைந்தது.
இப்படி வெற்றிகளை கொடுத்த சிம்பு மற்றும் மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடித்து வருகிறார். ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் இப்படம் இந்த கூட்டணியின் ஹாட்ரிக் வெற்றியாக அமையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். இதுதவிர கொரோனா குமார், பத்து தல ஆகிய படங்களிலும் சிம்வு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
யாருக்கும் தெரியாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து இந்த பிரபலம் வெளியேறினாரா?