அந்த காட்சிக்காக அஜித் படத்தை 5 முறை பார்த்தேன்.. சிம்பு உடைத்த ரகசியம்
தக் லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’.
இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன் திரிஷா நடனத்தில் 'சுகர் பேபி' என்ற 2-வது பாடல் வெளியானது.
ரகசியம்
இந்நிலையில், தக் லைப்' படத்தின் புரமோசனில் நடிகர் சிம்பு 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தை 5 முறை பார்த்ததாக கூறிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " இந்த காலத்தில் பிடித்த படத்தின் காட்சிகளை எளிதாக கட் செய்து பகிர்ந்து விடுகிறார்கள். அப்போதெல்லாம் அந்த வசதி கிடையாது.
அஜித்தின் 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் கடைசியாக வரும் 'என்ன சொல்லப் போகிறாய்' நாதஸ்வர போர்ஷனை காண்பதற்காகவே அந்த படத்தை 4 முதல் 5 முறை பார்த்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
