மீண்டும் தமிழ் படத்தில் சில்க் ஸ்மிதா.. நடிகைக்கு முத்தம் கொடுத்த எஸ்.ஜே. சூர்யா
சில்க் ஸ்மிதா
திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நடிகைகளை ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டு, கனவு கன்னியாக வலம் வருவார்கள். அப்படி ரசிகர்களின் கனவு கன்னியாக 80களில் இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா.

இவருடைய நடனத்திற்கு, நடிப்பிற்கு ஏராளாமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர் கடந்த 1996ஆம் ஆண்டு காலமானார். இவருடைய மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பு தான். கடைசியாக இவர் நடித்த தமிழ் படம் 1996ல் வெளிவந்த திரும்பி பார் என்ற படம் தான்.
மீண்டும் தமிழ் படத்தில்
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தில் மீண்டும் சில்க் ஸ்மிதா நடிக்க வைத்துள்ளனர். அவரை போலவே இருக்கும் விஷ்ணு பிரியா என்பவரை நடிக்க வைத்து, சில்க் ஸ்மிதாவின் முகத்தை CGல் வடிவமைத்துள்ளனர்.

அந்த காட்சி நேற்று வெளிவந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளது. மேலும் டிரைலரில் சில்க் ஸ்மிதாவின் கையை பிடித்து எஸ். ஜே. சூர்யா முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம்பெற்று இருந்தது. அதே போல் சில்க் ஸ்மிதா என்றால் உடனடியாக ஞாபகம் வரும் 'அடியே மனம்' என்ற பாடலையும் போட்டுள்ளனர்.
#silksmitha #MarkAntony ,❤️? pic.twitter.com/KmLkhpOWJB
— bOxOffice ? (@subbuthalla2000) September 3, 2023
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் 14.2 ஓவரிலேயே..157 ரன் இலக்கினை எட்டி ஷதாப் கான் அணி அபார வெற்றி News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri