நடிகர் அரவிந்த் சாமியின் உண்மையான தந்தை இந்த சீரியல் நடிகரா.. இதுவரை வெளிவராத உண்மை
அரவிந்த் சாமி
21 வயதில் நடிக்க துவங்கி இளம் பெண்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் அரவிந்த் சாமி. ரொமாண்டிக் ஹீரோவாக தன்னுடைய திரை வாழ்க்கையை ஆரம்பித்த இவர் தற்போது சிறந்த வில்லன் நடிகர் என்று பெயர் எடுத்துள்ளார்.
குறிப்பாக தனி ஒருவன் திரைப்படம் இவர் மீது வைத்திருந்த பார்வையை ஒட்டுமொத்தமாக மாற்றியது. இப்படத்தின் மூலம் தான் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகி இருந்த அரவிந்த் சாமி கம் பேக் கொடுத்தார்.
நடிகர், நடிகைகள் பற்றி யாருக்கும் தெரியாத சில விஷயங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது அரவிந்த் சாமியின் மறுபக்கம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை வெளிவராத உண்மை
அரவிந்த் சாமியின் தந்தை V.D. சாமி என்று தான் இன்று வரை அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் அரவிந்த் சாமியின் தந்தை இல்லையாம். பிரபல சீரியல் நடிகர் டெல்லி குமார் தான் அரவிந்த் சாமியின் உண்மையான தந்தையாம்.
அதை நடிகர் டெல்லி குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அரவிந்த் சாமி தனக்கு பிறந்தவர் என்றும், அவர் பிறந்தவுடன் தத்து கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
குடும்பத்தில் அவ்வப்போது வரும் சுப நிகழ்ச்சிகளில் மட்டும் அரவிந்த் சாமி வந்து கலந்து கொள்வார் என தெரிவித்துள்ளார். நடிகர் டெல்லி குமார் ஆனந்தம், மெட்டி ஒலி என பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
600 கோடியை கடந்து வசூல் வேட்டையாடி வரும் ஜெயிலர்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
