தமிழ் படங்களை கேவலப்படுத்தி பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்த சிம்பு.. அதற்கு கமல் தான் காரணம்
பான் இந்தியா படங்கள்
சமீபகாலமாக வெவேறு மொழிகளில் இருந்து வெளியாகும் படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆம், சமீபத்தில் வெளிவந்த கே.ஜி.எப், புஷ்பா, ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் பான் இந்தியாவாக வெளிவந்து வெற்றிபெற்றது. குறிப்பாக கோலிவுட் பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தியது.
இதன்முலம், பலரும் தமிழ் திரையுலக படங்களை குறைசொல்லி, சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களில் கேவலப்படுத்தி வந்தனர்.
பதிலடி கொடுத்த சிம்பு
இந்நிலையில், தமிழ் படங்கள் குறித்து இப்படி பேசியவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதத்தில் சிம்பு பேசியுள்ளார்.
ஆம், நேற்று விக்ரம் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சிம்பு ' இங்கு எல்லோரும், பான் இந்தியா பான் இந்தியா என பேசிகிட்டு இருக்காங்க. கமல் சாரோட மருதநாயகம் படத்தின் ஐந்து நிமிட காட்சியை எடுத்து விடுங்க அது போதும், இவங்களுக்கெல்லாம் " என்று பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசியுள்ளார்.