சிம்பு அணிந்திருக்கும் உடையின் விலை ஒரு லட்சத்திற்கும் அதிகமா ! வைரல் புகைப்படம்..
சிம்புவின் அதிரடி
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், முன்பு போல் இல்லாமல் தற்போது அவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஈஸ்வரன், மாநாடு உள்ளிட்ட படங்களை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
அதுமட்டுமின்றி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார், கமல் அணிநிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து சிம்பு தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடம்பர உடை
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சிம்பு அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி சமீபத்தில் அவர் துபாய் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் அணிந்திருந்த உடை தான் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
ஆம், அவர் அணிந்துள்ள Balmain Pant-ன் விலை இந்திய மதிப்பின்படி ரூ.1,70,976 இருக்குமாம், இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

நடிகர் விஜய்காக எழுதிய கடிதத்தை கொடுக்க முடியாததால் மூதாட்டி உருக்கம் !
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan