நடிகர் சிம்புவின் தம்பி குறலரசனுக்கு குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
நடிகர் சிம்பு - குரலரசன்
திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் சிம்பு. இவருக்கு குறலரசன் எனும் ஒரு தம்பி இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். இவர் இசையில் ஆர்வம் கொண்டவர் ஆவார்.
இஸ்லாம் மதத்திற்கு மாறிய குறலரசன் அதே மதத்தை சேர்ந்த நபீலா என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
வீட்டிற்கு வந்த புதிய வாரிசு
இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நபீலா கடந்த சில நாட்களுக்கு முன் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
சிம்புவின் தங்கையான இலக்கியாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மகன் பிறந்ததன் மூலம் மாமாவானார் சிம்பு. அவ்வப்போது தனது மருமகனுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை கூட சிம்பு வெளியிடுவார்.
இந்த நிலையில் தற்போது தனது தம்பிக்கு குழந்தை பிறந்துள்ளதன் மூலம், பெரியப்பாவாகி இருக்கிறார். இதற்காக ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
