கவுதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்பு ஹீரோ இல்லை.. வேறு யார் தெரியுமா
கவுதம் மேனன் - சிம்பு
இயக்குனர் கவுதம் மேனன் தற்போது மம்மூட்டியை வைத்து படம் இயக்கி வருகிறார். இதன்பின் இவர் மீண்டும் சிம்புவுடன் இணைந்து பணிபுரியப்போவதாக தகவல் வெளிவந்தது.
இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனத்தில், கவுதம் மேனன் இயக்கத்தில், வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், உருவாகும் படத்தில் சிம்பு ஹீரோ என சில தினங்களுக்கு முன் கூறப்பட்டது.
சிம்பு ஹீரோ இல்லை
ஆனால், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளது என பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
இது நடந்தால், முதல் முறையாக கவுதம் மேனன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் இதுவே ஆகும். வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது ஜீனி எனும் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.