இந்த காம்போ வேற லெவல் இருக்குமே.. சிம்புவின் 50 -வது படத்தை இயக்குகிறாரா பிரபல இயக்குனர்!!
சிம்பு
நடிகர் சிம்பு செகண்ட் இன்னிங்சில் கலக்கி வருகிறார். தற்போது அவருடைய 48 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகுவதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைப் படத்தில் முக்கியமான ரோலில் சிம்பு நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
STR 50
எந்தவொரு நடிகருக்கும் தனது 50வது திரைப்படம் ரொம்பவே ஸ்பெஷல். அதே போல் சிம்பு தன்னுடைய 50 வது படத்தையும் அப்படி ஸ்பெஷலாக்க பிரபல இயக்குனர் சுதா கொங்கராவிடம் பேச்சுவார்த்தை நடித்தி இருக்கிறார்.
சுதா கொங்கரா சொன்ன கதை சிம்புவுக்கு பிடித்துவிட்டதாகவும், சூர்யாவின் புறநானுறு படத்தின் பணிகளை முடித்துவிட்டு சிம்பு 50 படத்திற்கான பணிகளை தொடங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
