எனக்கு எதுவும் தெரியாதா? அனிதா சம்பத்தை வெளுத்து வாங்கிய சிம்பு
தன்னை பற்றி அனிதா பேசியது தொடர்பாக சிம்பு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அனிதா சர்ச்சை பேச்சு
"சிம்பு பிக் பாஸ் ஷோவுக்கு புதுசு.. அவருக்கு எதுவும் அழமாக புரியாது. கமல் சாருக்கு 5 சீசன் அனுபவம் இருக்கிறது" என அனிதா பேசி இருந்தார். அந்த வீடியோ சில தினங்கள் முன்பு இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.
இந்நிலையில் இன்று சிம்பு அனிதாவிடம் அது பற்றி கேள்வி எழுப்பினார்.
சமாளித்த அனிதா
"எனக்கு எதுவும் தெரியாது, பிக் பாஸ் ஆழம் புரியாது என ஒருவர் பேசியதை கேட்டேன். அது என்ன ஆழம் என சொன்னீங்க என்றால் இறங்கி பார்த்துவிடுவேன்" என சிம்பு ஆவேசமாக கேட்டார்.
ஆனால் அனிதா தான் அப்படி சொன்னது நினைவிலேயே இல்லை என கூறிவிட்டார். நான் எப்படி சொல்லி இருந்தாலும் பாசிட்டிவ் ஆக தான் சொல்லி இருப்பேன் என அவர் கூறுகிறார்.
அதன் பின் பாலாஜி முருகதாஸ் கண்ணீர் விட்டது பற்றி சிம்பு பேசும்போது, "சிம்பு ruf and tuf ஆன ஆள், மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசிவிடுவார் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அப்படி இருப்பதால் எனக்கு வந்த வலி, நான் எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கிறேன் என பலருக்கும் தெரியாது. அந்த அழுகை பார்க்கும்போது அது நான் அழுததை நினைவுபடுத்தியது" என கூறினார்.
குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்