கல்யாணம் கட்டாயம் இல்லை.. நடிகர் சிம்பு ஓபன் டாக்
சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிம்பு தற்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறனுடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளார்.

இதை தொடர்ந்து டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சிம்புவிடம் தொடர்ந்து கேட்கப்பட்டு வரும் கேள்விகளில் ஒன்று, எப்போது திருமணம் என்பது தான். சிம்புவுக்கு திருமணம் நடக்கப்போகிறது என்கிற தகவல் அவ்வப்போது வெளிவரும், அதன்பின் அது வெறும் வதந்தி தான் என தெரியவரும்.
கல்யாணம் கட்டாயம் இல்லை
இந்த நிலையில், நடிகர் சிம்பு கல்யாணம் கட்டாயம் இல்லை என பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது "மொபைல் போன்கள் மனித உணர்ச்சிகளை மாற்றிவிட்டன. காதலும் பிரிவும் தற்போது வேகமாக நடக்கிறது. ஆனால் ஆழமான உறவுகள் இப்போதும் இருக்கத்தான் செய்கின்றன,, திருமணம் கட்டாயம் இல்லை, மனதளவில் இருவரும் தயாராக இருக்கும்போது மட்டுமே அது நடக்க வேண்டும். சமூகத்தை திருப்திப்படுத்த நான் உறவில் இணைய மாட்டேன்" என கூறியுள்ளார்.
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri