கல்யாணம் கல்யாணம்னு டார்ச்சர் பண்ணாதீங்க.. ஓப்பனாக பேசிய சிம்பு
வெந்து தணிந்தது காடு பட விழா
நேற்று வெந்து தணித்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதாக சொல்லப்பட்டது, ஆனால் சிம்பு மேடையிலேயே அதை மறுத்தார். வீட்டில் இருந்து இங்கு வருவதற்கு எதற்கு என்று நான் அதில் வரவில்லை என சிம்பு தெரிவித்தார்.
அந்த விழாவில் சிம்பு படத்தை பற்றி அதிகம் பேசவில்லை. 'படம் பண்றது தான் நம்ம வேலை. அதை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என சொல்வது ரசிகர்களின் வேலை' என கூறினார்.
மேலும் உதவி செய்தவர்களுக்கு நன்றியுடன் இருங்க, தாய் தகப்பனை கடைசி கைவிட்டுடாதீங்க எனவும் கேட்டுக்கொண்டார் அவர்.
திருமணம்?
சிம்புவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் பெண் பார்ப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தி வந்தது. அது பற்றி தொகுப்பாளர் பாவனா மறைமுகமாக மேடையில் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதில் சொன்ன சிம்பு சொன்ன பதில் இதுதான்..
"சும்மா நாம் யாரையும் திருமணம் செய்துகொள்ள முடியாது. இரண்டு பேர் ஒன்றாக இருந்தால் நாம் அதற்கு respect கொடுக்க வேண்டும். பெற்றோரிடம் வேண்டுகோள் வைக்கிறேன். பசங்களை 'கல்யாணம்.. கல்யாணம்..' என டார்ச்சர் பண்ணாதீங்க. இந்த சமுதாயம் கொடுக்கும் ப்ரெஷர் காரணமாக சில தவறான திருமணங்களும் நடக்கிறது.
"பசங்க முதலில் வாழட்டும் வாழ்க்கையை.யார் கரெக்ட்டா இருப்பாங்கனு பாக்கட்டும். அனைத்தையும் மீறி மேலே ஒருவன் இருக்கிறார். அவரா பாத்து ஒன்னு அனுப்புவார். அதுவரை சைலண்டாக வெயிட் பண்றது தான் நல்லது" என சிம்பு கூறி இருக்கிறார்.
41 வயதாகும் நடிகை சன்னி லியோனின் கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. குடும்ப புகைப்படம்